புதன், 22 ஜூலை, 2009

Stop IMF fund to Sri Lanka - online and email campaign-Please act

Hi all

You might have heard about IMF reconsidering the allow the fund to Sri Lanka which they had kept all this time against act of genocide in Sri Lanka.

But due to politcal game played now IMF is trying to pass the fund to Sri Lanka by liftings its demand. The earlier fund was not passed due to gross human right violations against Tamils in Eelam by Sri Lanka.

So it is our duty to sign up these petitions to ensure our voice is heard.
Please ensure you spread this message to all your friends.

Sign CanadianHART's petition to IMF:

http://haltgenocide.org/appeal_ifm/appeal_ifm.html

New - Sign CanadianHART's petition to Canada's Minister of Finance, Hon. Jim Flaherty -

http://haltgenocide.org/appeal_ifm2/appeal_ifm2.html

Sign PEARL action's petition to IMF Asia-Pacific Director at:

USA - http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=46

International - http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=47

Send e-mails to the major shareholders of IMF:

USA - Meg Lundsager, Email: mlundsager@imf. org
Japan - Daisuke Kotegawa, Email: dkotegawa@imf. org
Germany - Klaus D. Stein, Email: kstein@imf.org
UK - Alex Gibbs, Email: agibbs@imf.org
France - Pierre Duquesne, Email: pduquesne@imf. org
France - Alternate: Benoit Claveranne, Email: bclaveranne@ imf.org
Canada - Jonathan Fried (Canada), Email: jfried@imf.org
Alternate: Peter Charleton (Ireland) , Email: pcharleton@imf. org

பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? –

சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள “தேசிய இனப்பிரச்சனை குறித்து” என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.

1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.

2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.

3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தின் அடையாளப்படுத்த முடியாது.

ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் “ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை”

ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).

இலங்கை ராணுவம், ராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?

தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. “உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்” என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது). இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது.

இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.

உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.

எத்தனை எத்தனை கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.

கடந்த மே மாதம் வரை நடைப்பெற்ற போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்து குண்டு, விசவாயு குண்டு மற்றும் ரசாயனகுண்டு போன்றவற்றைகொண்டு தமிழினத்தை அழித்தபோது மவுனமே சம்மதம் என்று உலகநாடுகள் அமைதி காத்தன. இறுதி நாளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புல்டவுசர் மூலம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

அறுநூறு கோயில் மற்றும் தேவாலயங்கள் இடித்து தள்ளப்பட்டு கலாச்சார படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு முல்லைதூவ என்று சிங்கள பெயராக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்போது இறுதியாக நிவாரண முகாம் என்ற பெயரில் ஜெர்மனியில் இருந்ததைப்போன்று வதை நிவா”ரண” முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சரியான தண்ணீர் கிடையாது. குளிப்பதற்கு பாதுகாப்பான இடம் கிடையாது. பாலின வாரியாக மக்கள் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களும், யுவதிகளும் விசாரணை என்ற பெயரில் அழைத்துசெல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்காமல் திறந்தவெளி சிறைச்சாலையாக வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம்.முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது.சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து… கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம்.

மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?…

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்றுத்தரும்.

சிறிலங்காவின் போர் குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள்

தோழர்களே,

சிறிலங்காவின் போர் குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள்.

புகைப்பட ஆதாரங்கள்:
http://www.warwithoutwitness.com/index.php?option=com_phocagallery&vi...

காணொளி ஆதாரங்கள்:
http://www.warwithoutwitness.com/index.php?option=com_content&view=ca...

கட்டுரை ஆதாரங்கள்:
http://www.warwithoutwitness.com/index.php?option=com_content&view=ca...

அவசியம் மற்ற தோழர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

"சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல.
அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை." - தமிழீழத்
தேசிய தலைவர் மாவீரர் திரு.பிரபாகரன்.

திங்கள், 13 ஜூலை, 2009

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்

தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறி, பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது.
குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால், அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வாலை வெட்டின குட்டி ஆடுகள். ஊளையிட்டபடியே ஓடியது ஓநாய்.

ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.
கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...
என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.
மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அமெரிக்க அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். அவரது மனைவி, அன்னா எலீனர் ரூஸ்வெல்ட், மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர். நல்ல எழுத்தாளர். அச்சத்தை மட்டும் உங்கள் மனத்திலிருந்து அகற்றிவிட்டீர்களென்றால், எவ்வளவு மோசமான அனுபவத்திலிருந்தும் நீங்கள் பலத்தையும் மனோதிடத்தையும் நம்பிக்கையையும் பெறமுடியும் என்றார் எலீனர்.
எவருடைய மனைவி என்பதைவிட அவருடைய எழுத்துதான் எலீனரின் சுய அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. இது ஒருரகம். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், இவருடன் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டே நம்மை அச்சுறுத்தும் விதத்தில் எழுதுவது இன்னொரு ரகம். இப்படியெல்லாம் ஜோடனை செய்பவர்களுக்கு, நம்மை பலவீனப்படுத்துவதைத் தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை.
30 ஆண்டுகளாய் தாய் மண்ணில் நின்று போராடியவர்களுக்கு, அச்சம் தவிர் என்று ஆணையிட்ட பாரதியையும் தெரியும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவமும் தெரியும். எலீனர் சொன்னதும் தெரியும். எதை எங்கே எப்படி 'அப்ளை' செய்வது என்பதும் தெரியும். அவர்களுக்கு, பாதுகாப்பான இடங்களிலிருப்போரின் போதனை தேவையில்லை.
எலீனர் சொன்னதை விடுங்கள்... லசாந்த விக்கிரமதுங்க சொன்னதையாவது இவர்கள் புரிந்துகொண்டார்களா?. லசாந்த என்ற அந்த ஆண்மை தவறாத பத்திரிகையாளன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்படுகிறான். தான் கொல்லப்படலாம் என்பதை அவன் அறிந்தே இருந்தான். கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே இருக்கிறேன், யார் கொலையாளி என்பதும் தெரியும், எப்போது என்பதுதான் தெரியவில்லை.... என்று கொல்லப்படுவதற்கு முன்தினம் எழுதியவன் அவன்.
லசாந்தவின் மரணவாக்குமூலமாகவே கருதப்படும் அந்தக் கடைசி தலையங்கம் ராஜபட்சேவை இப்படி எச்சரித்தது: தமிழர் பகுதிகள் முழுவதையும் நீ கைப்பற்றிவிடலாம். போராளிகளை நசுக்கிவிட்டதாக அறிவிக்கலாம். இந்த வெற்றியை நீ கொண்டாடலாம். ஆனால், தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்படுபவர்கள் மீண்டும் எழும்போது முன்னிலும் வலுவாக எழுவார்கள்.
லசாந்த, விவரமான பத்திரிகையாளன். அதனால்தான், பின்னர் என்ன நடக்கும் என்பதை ஜனவரியிலேயே எழுதினான். இதற்கு ஜோதிட அறிவு தேவையில்லை, குறைந்தபட்ச வரலாற்று அறிவு இருந்தாலே போதும். கடந்த காலத்தைத் திரும்பிப்பார்ப்பது வரலாற்றின் புதைகுழியிலிருந்து எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்காக அல்ல, கடந்த காலங்களில் அடியோடு நசுக்கப்பட்ட இனங்களெல்லாம் எப்படி வீறுகொண்டெழுந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்காக.. லசாந்த அதைப் புரிந்துகொண்டிருந்தான். ஒப்பாரிப் பாடகர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?
2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபிறகு, அரசுகள்-ஆயுத இயக்கங்கள் என்று உலகம் இரண்டே தரப்பாகப் பிரிந்து விட்டதாகவும் நியாயமான வேட்கைகளுக்காகக் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை உருவானதாகவும் சொல்பவர்கள், நடந்ததைத்தான் சொல்கிறார்கள். தங்கள் தாய் மண்ணைச் சுவாசித்து மரணத்தை நேசித்த மாவீரர்களுக்கு புரியாத இந்த "உண்மை", இப்போது இதைச் சொல்லும் அறிவாளிகளுக்கு அப்போதே புரிந்திருக்கும் தானே.
அப்போது இருந்த அந்தச் சூழ்நிலையில்- தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டம் என்பதையும், அவர்கள் தங்கள் தாயகத்தை மீட்கத்தான் போராடுகிறார்கள் என்பதையும், விடுதலைப் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் சர்வதேசத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்த மகானுபாவர்கள் செய்ததென்ன?
அப்போது இவர்களிடம் பேனா இல்லையா, லாப்டாப் இல்லையா, இன்டர்நெட் இணைப்பு இல்லையா? நாட்டில் ரத்தம் சிந்திப் போராட இயலாத நிலையில், புலத்திலிருந்த தங்களது "ஸ்மார்ட் பவர்"-ஐ இதற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்க முடியுமே! பயன்படுத்தினார்களா, இல்லையா? இல்லையென்றால், இவர்களுக்கெல்லாம் ஸ்மார்ட் பவர் இருந்தென்ன, இல்லாமல் தொலைந்தென்ன!
எந்தத் தலைவனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லையோ அந்தத் தலைவனைப் பற்றி எழுதிக் குழப்பியவர்கள், பிரபாகரனை தமிழ்ச் செல்வன் ஏமாற்றிவிட்டதாக புழுதி கிளப்பியவர்கள், திடீரென ஞானோதயம் பெற்று, உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் அனைவருக்கும் நல்லது என்று உபதேசிக்கிறார்கள். புதிய உபதேசிகள்!
உருப்படியாக என்ன செய்யவேண்டுமாம்? இந்தியாவோடு அனுசரித்து, இந்தியாவை அரவணைத்து, இருதரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நகர்த்தவேண்டுமாம். பிறப்பால் மேட் இன் இண்டியா-வாக இருக்க நேர்ந்துவிட்டதுகுறித்த குற்ற உணர்வுடன் நாங்கள் கூனிக் குறுகி நிற்கிறோம். இது தெரிந்தும், அனுசரிக்க வேண்டும்... அரவணைக்க வேண்டும்... என்று எழுதினால் என்ன அர்த்தம்? அது என்ன மேட் இன் இண்டியா பேனாவா?
எந்த இந்தியாவை அரவணைக்கச் சொல்கிறார்கள்?
1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட இந்தியாவையா? தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தெரியாத இந்தியாவையா? அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த இந்தியாவையா? போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருப்பதாக நேசத்துடனிருந்த ஒரு மாநில முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த இந்தியாவையா?
காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஹுக்கா பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவையா? ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியே, இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய இந்தியாவையா? அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீச எந்த விமானத்தளத்திலிருந்து போர்விமானங்கள் புறப்பட்டனவோ அந்த விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த இந்தியாவையா? ஆயிரக் கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த இந்தியாவையா? பல்வேறு நாடுகள் ராஜபட்சேவைக் கண்டிக்க, அந்த பிணந்தின்னிக் கழுகுக்குப் பாராட்டுமடல் வாசிக்கும் இந்தியாவையா?
1942 ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவில், மும்பை காங்கிரஸில் காந்தி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அன்று அவரது பேச்சு, அவரது வழக்கமான பாணியில் அமைந்திருக்கவில்லை. கடுமையாக இருந்தது.
எங்களுக்கு உடனடியாக சுதந்திரம் வேண்டும்.. முடிந்தால், விடிவதற்குள்! செய் அல்லது செத்துமடி என்ற தாரகமந்திரத்தை இந்தியாவுக்குத் தருகிறேன். முடிந்தால் விடுதலை பெறுவோம்... அல்லது அதற்கான முயற்சியில் செத்துமடிவோம் என்று மும்பை நகரே அதிரும்விதத்தில் அந்த கிழட்டுச் சிங்கம் சீறியது.
அந்த காந்தியால் தான்... அண்ணல் காந்தியால்தான் இந்தியா பெருமை பெற்றதே தவிர, அன்னை சோனியாகாந்தியால் அல்ல! அன்றைக்கு காந்திக்கு சுதந்திரம் பிறப்புரிமை, இன்றைக்கு பிரபாகரனுக்கு சுதந்திரம் பிறப்புரிமை. அதனால்தான் அந்தக் கிழட்டுச் சிங்கம் சொன்னதை இந்த இளம்புலியும் சொன்னது- "செய் அல்லது செத்துமடி!"
இந்தியாவை அனுசரித்துப் போகும்படி நமக்கு போதிப்பவர்கள் காலச் சக்கரத்தில் ஒரு 60 ஆண்டு பின்னோக்கிய பயணம் செய்துகொண்டிருக்கிறார்களோ.... இது மகாத்மா காந்தியின் தேசம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ.... ஐரோப்பாவிலிருந்து அழகு சாதனங்கள் மட்டுமின்றி காந்திகள் கூட இறக்குமதி ஆவதை அவர்கள் அறியவில்லையோ.. அவர்களுக்கே வெளிச்சம்.

இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.
இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.
திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.

நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?
புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!
இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.
அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத் தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.
இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும். தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாகஇ நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.
அடுத்த படி இதைவிட முக்கியமானது.
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.
தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கை தான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த. மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.
ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்திஇ ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.
எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும். அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம். சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".
குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத் தான்.குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம். அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலு, பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.) போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.
தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம். அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம். செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள் தான்.
ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.
இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது. சர்வதேச அரங்கில்இ போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும். ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.
ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.
இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.
மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான். எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.
பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்கள்கூட
ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.
வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை
நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த
நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....
ரத்தம் குடித்த ராஜபட்சிகளை
சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....

இறக்கை என்பது இயற்கையின் எல்லை,
இயலாதென்று முயலாதவர்கள்
இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.

முத்துக்குமாரின் நினைவோடு
ஒட்டுமொத்த உலகத்தையும்
திரும்பிப் பார்க்கவைத்த
எங்கள் இளையோரின் அகராதியில்
இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.

அந்தப் பொடியன்களின் தலைமையில்
உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....
களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!
ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.
தமிழ்க்கதிருக்காக,
காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்
- புகழேந்தி தங்கராஜ்

http://www.tamilkathir.com/news/1599/58//d,full_view.ஆசப்

முத்தமிழ்
Chennai

பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்க்கு உள்ளதா?

சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.

1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.

2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.

3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தின் அடையாளப்படுத்த முடியாது.

ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் "ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை"

ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).

இலங்கை ராணுவம், ராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?

தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது). இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது.

இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.

உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.

எத்தனை எத்தனை கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.

கடந்த மே மாதம் வரை நடைப்பெற்ற போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்து குண்டு, விசவாயு குண்டு மற்றும் ரசாயனகுண்டு போன்றவற்றைகொண்டு தமிழினத்தை அழித்தபோது மவுனமே சம்மதம் என்று உலகநாடுகள் அமைதி காத்தன. இறுதி நாளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புல்டவுசர் மூலம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

அறுநூறு கோயில் மற்றும் தேவாலயங்கள் இடித்து தள்ளப்பட்டு கலாச்சார படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு முல்லைதூவ என்று சிங்கள பெயராக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்போது இறுதியாக நிவாரண முகாம் என்ற பெயரில் ஜெர்மனியில் இருந்ததைப்போன்று வதை நிவா"ரண" முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சரியான தண்ணீர் கிடையாது. குளிப்பதற்கு பாதுகாப்பான இடம் கிடையாது. பாலின வாரியாக மக்கள் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களும், யுவதிகளும் விசாரணை என்ற பெயரில் அழைத்துசெல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்காமல் திறந்தவெளி சிறைச்சாலையாக வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம்.முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது.சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து… கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம்.

மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?...

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்று தரும்.

முத்தமிழ்வேந்தன்
சென்னை

திங்கள், 1 ஜூன், 2009

‌பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்: சீமா‌ன் ஆவேசம்!



பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்‌று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல்,
"இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.
ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.
எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?
தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.
பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்.
தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.
மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.
சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை.
சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா?
நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?
இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.
ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.
இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன்.
இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.
இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.
இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன்.
இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.
இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது.
தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது.
எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்" எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர்


இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் “”தோல்வியின் பண்பாடு” – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.
படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: “”உன்னை தோற்கடித்தவனின்
இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!”.
நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். “”வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?” என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். “”உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை” என்பார் சீசர்.
“”சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?
கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.
பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். “”என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.
எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?
நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே “மறக்க முடியுமா?’ எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
கடந்த இதழ் படித்துவிட்டு “”எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…” என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, “சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது’. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.
முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.
உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.
இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. “சென்னை சங்கமம்’ தொடர்பானது அது.
2007 பெப்ருவரியில் முதல் “சென்னை சங்கமம்’ நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் “சென்னை சங்கமம்’ அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.
மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் “”பெங்களூரு ஹப்பா” நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.
ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் “சென்னை சங்கமம்’ என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு “மறக்க முடியுமா?’ களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.
(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்