தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. தலையிட வேண்டும்: சீக்கிய அடிப்படைவாத அமைப்பு கோரிக்கை
[வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009, 10:34 பி.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
ஈழத் தமிழர்களுக்குத் தமது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கும் இந்தியாவின் சீக்கிய அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான டால் ஹால்சா (Dal Khalsa) போர் இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
"ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்துலக சமூகம் ஈடுபடாத அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் படுகொலைகளைச் செய்துவருகின்றது" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது ஐ.நா.வின் கோட்பாடுககளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்த சிங், சிறிலங்கா இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமானதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.dalkhalsa.com/ContactUs.html
http://www.puthinam.com/full.php?2b47TXd4b4b49CO34d3VOrX2b02LcCKe4d320mBce0dl1RrHce0dl1cv2cc0de6O3e
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக