சனி, 9 மே, 2009

ஐ.நா. மின்னஞ்சல்கள்

switzerland@un.int
sweden@un.int
netherlands@un.int
germany@un.int
greece@un.int
australia@un.int
austria@un.int
belgium@un.int
canada@un.int
cuba@un.int
cyprus@un.int
denmark@un.int
finland@un.int
france@un.int
austria@un.int
azerbaijan@un.int
france@un.int
germany@un.int
hungary@un.int
ireland@un.int
italy@un.int
kazakhstan@un.int
lithuania@un.int
netherlands@un.int
poland@polandun.org
portugal@un.int
romania@un.org
slovenia@un.int
spain@spainun.org
swaziland@un.int
sweden@un.int
uk@un.int
ocha-eritrea@un.org
sg@un.org
albania@un.int
algeria@un.int
themission@angolaun.org
antigua@un.int
argentina@un.int
armenia@un.int
australia@un.int
austria@un.int
azerbaijan@un.int
bahrain@un.int
bangladesh@un.int
belarus@un.int
botswana@un.int
bulgaria@un.int
bfapm@un.int
burundi@un.int
cambodia@un.int
canada@un.int
capeverde@un.int
caf@un.int
chile@un.int
congo@un.int
costarica@un.int
cuba@un.int
drcongo@un.int
nycmis@um.dk
ecuador@un.int
egypt@un.int
elsalvador@un.int
mission@eritrea-un.org
ethiopia@un.int
fiji@un.int
france@un.int
gambia@un.int
germany@un.int
grenada@un.int
guatemala@un.int
guyana@un.int
haiti@un.int
hungary@un.int
ireland@un.int
italy@un.int
jamaica@un.int
mission@un-japan.org
kazakhstan@un.int
kenya@un.int
kuwaitmission@msn.com
mission.un-ny@mfa.gov.lv
lebanon@nyct.net
lesotho@un.int
libya@un.int
mission@nyc.rep.llv.li
lithuania@un.int
newyork.rp@mae.etat.lu
repermad@verizon.net
mission-un.newyork@gov.mt
marshallislands@un.int
mauritania@un.int
mauritius@un.int
mexico@un.int
fsmun@fsmgov.org
unmoldova@aol.com
monaco@un.int
mongolia@un.int
info@morocco-un.org
mozambique@un.int
myanmar@un.int
myanmarmission@verizon.net
namibia@un.int
nauru@un.int
nauru@onecommonwealth.org
nepal@un.int
netherlands@un.int
nzmissionny@earthlink.net
nicaragua@un.int
niger@nigerun.org
delun@mfa.no
un.newyork@mfa.no
oman@un.int
mission@palauun.org
emb@panama-un.org
pngmission@pngun.org
paraguay@un.int
onuper@aol.com
misunphil@aol.com
poland@polandun.org
portugal@un.int
qatar-e@qatarmission.org
korea@un.int
misiune@romaniaun.org
romania@un.org
rusun@un.int
rwaun@un.int
sknmission@aol.com
slumission@aol.com
svgun@aol.com
samoa@un.int
sanmarinoun@hotmail.com
stp1@attglobal.net
saudi-mission@un.int
senegal.mission@yahoo.fr
serbia-montenegro@un.int
seychelles@un.int
sierraleone@un.int
singapore@un.int
mission@newyork.mfa.sk
slovenia@un.int
simun@foreignaffairs-solomons.org
somalia@un.int
pmun@southafrica-newyork.net
spain@spainun.org
sudan@sudanmission.org
suriname@un.int
swaziland@un.int
sweden@un.int
vertretung-un@nyc.rep.admin.ch
syrianmission@verizonmail.com
tajikistanun@aol.com
thailand@un.int
macedonia@nyct.net
timor-leste@un.int
tongaunmission@aol.com
tto@un.int
tunisnyc@nyc.rr.com
turkuno-dt@un.int
turkmenistan@un.int
tuvalu@onecommonwealth.org
uno_us@mfa.gov.ua
uk@un.int
tzrepny@aol.com
usa@un.int
uruguay@un.int
vanunmis@aol.com
venezuela@un.int
vietnamun@vnmission.com
yemen@un.int
zimbabwe@un.int.org

செவ்வாய், 5 மே, 2009

"இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா



"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

"உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும், உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்.

இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னஞ் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கொடும் செயல்களை செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினால் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன்னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்துவிட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தெய்வங்களுடன் தொடர்புகொள்வது கூட அவர்களுக்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினரதாகவும்தான் இருக்கின்றனர்.
உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நடுவர்போல அன்றாடம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமெக்காவோ, பாகிஸ்தானை சரிக்கட்டுவதில்தான் மும்முரமாக இருக்கிறது.


சாதாரணமாக, எங்கேயாவது மனித உரிமைகள் மீறப்படுவதாக உறுதியற்ற செய்தி வந்தால்கூட வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்படும். அமெரிக்க ஊடகங்கள் வெகுவிரைவாகச் செயற்படும். உண்மையான, கற்பனையான மனித உரிமை மீறல் செய்திகளை அச்சில் ஏற்றுவதற்காக தொன் கணக்கில் செய்தித்தாள் காகிதம் அர்ப்பணிக்கப்படும். பிறகு குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, அமெரிக்காவின் ஆணைப்படியான ஏற்பாட்டுக்கு அடிபணியும் வரையில், அனைத்துலக அரங்குகளுக்கோ மற்றவற்றுக்கோ இழுத்து வரப்படும். ஒரே ஒரு உயிர் போயிருந்தால் கூட, ஒரே ஒரு மனித உரிமை மீறல் நிகழ்ந்திருந்தால்கூட இவை எல்லாம் நடக்கும்.

ஆனால், இலங்கையில் நாள்தோறும் நடைபெறும் அடக்குமுறைகள் குறித்து எதையுமே பார்க்காதது போல, எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?.

அமெரிக்காவின் இந்த அக்கறையற்ற போக்குதான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால், ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயற்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே, உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயற்படுவார்கள். அவர்கள் அதிகம்Œசாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்படும் நாட்டுக்குச் சென்று வருவார்கள், தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வருவது, குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டுக்குத் தெரிவிக்கும்.

உலகின் இந்த உயர்நிலை கவனம், அதைத் தொடர்ந்த ஊடகங்களின் பார்வையும் தடுப்புக்கேடயமாக மாறி குற்றம் இழைப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை ஓரளவுக்குக் குறைப்பதற்கும் உதவும்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவை எதுவுமே நடக்கவில்லை. அக்கறையற்ற இந்தப் போக்குதான், சிறிலங்கா அரசை துணிச்சல் அடைய வைத்திருக்கிறது என்பது தெளிவு.

மேலும், இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறிமுறையாகிவிட்டது.

மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அதுதான். இல்லாவிடில் பொஸ்னியா, கொசோவோ தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயற்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? சேர்பியாவைப் பணிய வைப்பதற்காக அதன் மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலகச சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை? இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா?

புவியியல், வரலாறு, இனம், மொழி, மதம், பண்பாடு என அவர்களுடன் நமக்குள்ள அனைத்துத் தொடர்புகளும் அதைத்தானே வலியுறுத்துகின்றன. எப்போதேனும் அமைச்சர் ஒருவர் அரை மனதுடன் முயற்சி எடுப்பார். நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுப்பார். அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதுபோல சிறிலங்கா அரசு விரைவிலேயே அதை ஒதுக்கித் தள்ளிவிடும்.
இந்த முடிவு பிரபாகரனுக்கு வேண்டும் என்பது போன்ற பழிவாங்கும் பார்வையை நமது பார்வையாளர்களில் சிலர் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்கு எதிராக மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் எதிரான இந்த வாதத்தில் ஒருவேளை வலு இருக்கலாம். அவர்களுக்காக யாரும் வாதாடவில்லை. அவர்கள் விடயத்திலும்கூட அதேபோல அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது.

மும்பாயில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் காசப் செய்த குற்றங்களையும் படுகொலைகளையும் தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்கின்ற நிலையில், வழக்கு விசாரணையில் அஜ்மல் காசப்புக்கு விரிவான வதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? அஜ்மல் காசப்பும் அவனது கூட்டாளிகளும் இந்தியாவின் பொருளாதார அடித்தளத்துக்கே அறைகூவல் விடுத்தனர். 180 பேரை படுகொலை செய்தனர்.

எனினும் அஜ்மல் காசப்புக்கு அரசு”தரப்புக்கு எதிராகப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட நாம் முடிவு செய்தாலும்கூட, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை நாம் எப்படி விட முடியும்? அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? அவர்களைப் பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்று சிலர் வெட்கமின்றி வாதாடுகிறார்கள். நம்முடன் மரபுவழி உறவுள்ள இந்தியத் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குக் குடிபெயர்வதற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள், அவர்களிலும் பெரும்பகுதியினர் பயங்கவாதிகள், இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டும் இல்லை என்பதற்கு இத்தகைய மனிதர்களே வாழும் எடுத்துக்காட்டு. நமது உலகம் மற்றவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டாத உணர்ச்சியற்ற உலகம் என்பதற்கு இவர்களே சான்று. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு வரலாற்று வழிப்பட்ட உறவு. அதுவே பலவழிகளிலும் அவர்கள்பால் நம்மைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகிறது. அத்தகையதொரு பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில்தான் இராமர் இலங்கைக்குச் சென்றார்.

வருந்தத்தக்க வகையில், இந்தியா அடிக்கடி அதன் சொந்த மக்களின் துன்பங்களைக் கண்டும் அசையாமல் இருந்து வருகிறது. இல்லாவிடில், உகண்டாவில் கொடுங்கோலன் இடி அமீனால் நமது மக்கள் ஒடுக்கப்பட்டபோது, நாம் அவர்களது உதவிக்குச் சென்றிருப்போம். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்திருப்போம். கரீபிய நாடுகளில் உள்ள இந்திய மரபுவழித் தமிழர்கள் இழிவுடன் நடத்தப்படுவதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடுத்திருப்போம். அவர்களைப் போலவே, நமக்கு அண்டையில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டு விட்டோம்.

தேர்தல் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் அப்படியேதான் விடப்பட்டிருப்பார்கள். திடீரென, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பதிலுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களாக அது மேற்கொண்டு வந்த முயற்சிகள் பயன் அளித்துள்ளதாகக் கூறி வருகிறது.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு”ஒப்புக் கொண்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது.

தமிழர்கள் சிக்கியிருக்கும் பகுதி சிறிய பகுதியாகச் சுருங்கிவிட்டதால், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது தேவை இல்லை என்பதால், படை நடவடிக்கைகளின் அளவை சிறிலங்கா ஓரளவுக்குக் குறைத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மையான காரணம்.

நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அரசினுடைய நெருக்குதல் இலங்கையில் பயனளிக்கத் தொடங்கிவிட்டது என்பது உண்மையாக இருந்தால், இதைச் செய்வதற்கு இவ்வளவு காலம் அது ஏன் காத்திருந்தது? என்று மத்திய அரசிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிற, முடமாக்கப்படுகிற, விதவைகள் ஆக்கப்படுகிற, ஆதரவற்றவர்கள் ஆக்கப்படுகிற வரையில் அது ஏன் காத்திருக்க வேண்டும்? எதையும் செய்வதற்கு மனமற்ற, அக்கறையற்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இதற்கிடையே, நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் தங்களது படை சார் நலனுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இறுதியில் சிறிலங்காவினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். நம்மால் வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் மனமில்லை." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா

Chinese threat to India: Time for USA and India to support Tamil Eelam


Times on line reports that;

“On the southern coast of Sri Lanka, ten miles from one of theworld’s busiest shipping routes, a vast construction site is engulfingthe once sleepy fishing town of Hambantota. This poor community of21,000 people is about as far as one can get on the island from thefighting between the army and the Tamil Tiger rebels on thenortheastern coast. The sudden spurt of construction helps, however,to explain why the army is poised to defeat the Tigers and why Westerngovernments are so powerless to negotiate a ceasefire to helpcivilians trapped on the front line.

This is where China is building a $1 billion port that it plans to useas a refueling and docking station for its navy, as it patrols theIndian Ocean and protects China’s supplies of Saudi oil. Ever sinceSri Lanka agreed to the plan, in March 2007, China has given it allthe aid, arms and diplomatic support it needs to defeat the Tigers,without worrying about the West. Even India, Sri Lanka’s long-timeally and the traditionally dominant power in South Asia, has founditself sidelined in the past two years — to its obvious irritation.“China is fishing in troubled waters,” Palaniappan Chidambaram,India’s Home Minister, warned last week.

The Chinese say that Hambantota is a purely commercial venture, butmany US and Indian military planners regard it as part of a “string ofpearls” strategy under which China is also building or upgrading portsat Gwadar in Pakistan, Chittagong in Bangladesh and Sittwe in Burma.

The strategy was outlined in a paper by Lieutenant-Colonel ChristopherJ. Pehrson, of the Pentagon’s Air Staff, in 2006, and again in areport by the US Joint Forces Command in November. “For China,Hambantota is a commercial venture, but it’s also an asset for futureuse in a very strategic location,” Major-General (Retd) DipankarBanerjee of the Institute of Peace and Conflict Studies in Delhi said.

The British Navy used the Sri Lankan port of Trincomalee as its mainregional base until 1957 and still shares a naval base with the US onthe nearby island of Diego Garcia. China has no immediate plans for afully fledged naval base but wants a similar foothold in the IndianOcean to protect its oil supplies from piracy or blockade by a foreignpower, analysts say.

Beijing sent three ships on an unprecedented anti-piracy mission tothe Gulf of Aden in December, and in January a Chinese defence WhitePaper said that the navy was “developing capabilities of conductingco-operation in distant waters . . .

”China has cultivated ties with Sri Lanka for decades and became itsbiggest arms supplier in the 1990s, when India and Western governmentsrefused to sell weapons to Colombo for use in the civil war. Beijingappears to have increased arms sales significantly to Sri Lanka since2007, when the US suspended military aid over human rights issues.

Many of the arms have been bought through Lanka Logistics &Technologies, co-headed by Gotabhaya Rajapksa, the Defence Secretary,who is also the President’s brother.

In April 2007 Sri Lanka signed a classified $37.6 million (£25million) deal to buy Chinese ammunition and ordnance for its army andnavy, according to Jane’s Defence Weekly.

China gave Sri Lanka — apparently free of charge — six F7 jet fighterslast year, according to the Stockholm International Peace ResearchInstitute, after a daring raid by the Tigers’ air wing destroyed tenmilitary aircraft in 2007. One of the Chinese fighters shot down oneof the Tigers’ aircraft a year later.

“China’s arms sales have been the decisive factor in ending themilitary stalemate,” Brahma Chellaney, of the Centre for PolicyResearch in Delhi, said. “There seems to have been a deal linked toHambantota.

”Since 2007 China has encouraged Pakistan to sell weapons to Sri Lankaand to train Sri Lankan pilots to fly the Chinese fighters, accordingto Indian security sources.

China has also provided crucial diplomatic support in the UN SecurityCouncil, blocking efforts to put Sri Lanka on the agenda. It has alsoboosted financial aid to Sri Lanka, even as Western countries havereduced their contributions.

China’s aid to Sri Lanka jumped from a few million dollars in 2005 toalmost $1 billion last year, replacing Japan as the biggest foreigndonor. By comparison, the United States gave $7.4 million last yearand Britain just £1.25 million.

“That’s why Sri Lanka has been so dismissive of internationalcriticism,” said B. Raman of the Chennai Centre for China Studies. “Itknows it can rely on support from China.

”COMMUNISTS of INDIA, who split into CPI and CPM over the question ofwhich country to lean ideologically must realize that all their loudvoices in Tamilnadu in supportive of Eelam Tamil’s struggle will betreated as mere verbal gymnastics, unless these parties urge Russiaand China not to block UN Security council debates on Srilanka nor tostall UN intervention.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். - காசி ஆனந்தன்


ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.
திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது. கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், இயக்குநர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.


தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:
ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை... அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு.


வியட்நாம், தென் அமெரிக்கா, க்யூபா, சீனா, ரஷ்யா... என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீர்யத்துடன் நடக்கிறது.
உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு... நம்மைத் தவிர வேறு யார்?.இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.


பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.

இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது... அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும்.

பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிற பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வேலை இது.

துரோகிகளைக் களையெடுப்பது தவறல்ல...
எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் துரோகிகளைக் களையெடுப்பது தொன்று தொட்டு இருந்து வருவது. இயக்கத்தைக் காத்து, இறுதி லட்சியத்தை அடைய அந்தத் தண்டனைகள் அவசியம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இயக்கத்திலேயே சேருகிறார்கள்...


ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் துரோகி ட்ராட்ஸ்கியை அமெரிக்காவிலும் துரத்தித் துரத்திக் கொன்ற ஸ்டாலின் பயங்கரவாதியா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலையெடுத்துவிட்ட துரோகிகளைக் களையெடுத்த ம சே துங் பயங்கரவாதியா... இவர்களை உலகின் மாபெரும் புரட்சித் தலைவர்கள் என்று உலகமே கொண்டாடவில்லையா... பிரபாகரன் செய்ததில் மட்டும் என்ன பயங்கரவாதம் வந்துவிட்டது?

பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது... இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்... உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள்.இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே... அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

தமிழினத் துரோகி மேயர் துரையப்பாவை அழித்துவிட்டுத்தான் முன்பு தமிழகம் வந்தார் பிரபாகரன். அன்று அவரை இருகரம் நீட்டி பாசத்துடன் அரவணைத்தவை அன்னை இந்திராவின் கரங்கள். இந்த பிராந்தியத்தின் அசைக்கமுடியாத தலைவி அவர். அவருக்குத் தெரியாதா பிரபாகரன் இயக்கம் செய்த களையெடுப்பு வேலை? தெரியும்... ஆனாலும் அவர் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். புலிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.

ஒரு இனத்தை வாழ வைக்க சிலவற்றை மறக்கலாம்...
ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது?3000 தமிழ் தாய் - சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?


புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே...

எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?.

எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா... அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா?

எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது:முழுமையான போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும், என்றார் காசி ஆனந்தன்.

நடைபிணமாக ஈழக் குழந்தைகள்! ”ஆமி மாமா.. சோறு போடுங்க…”


கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு… தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்… உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்… எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்… என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்கு தல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,
”ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிபேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள ராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

ராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தை கள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.

பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனசாட்சி யுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தை களைத் தனிமைப்படுத்தும் சிங்கள ராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தை களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, ராணுவத்தினரிடம் பிடிபட் டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க… அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது.

ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.
மதிய வேளைகளில் ராணு வத்தினர் வரும்போது, ‘ஆமி மாமா, சோறு போடுங்க…’ என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்!

பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.

கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.

ராணுவத்தின் நடவடிக் கைகளை ஆழமாகக் கவனித்தால்… ‘இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்’ என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது. வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!” என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!

”கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன.
‘எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!’ என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.

சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.

ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு சிறுமி, ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங் களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.
தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள்.

‘கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்!’ என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் ராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன. குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை.

என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!” என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது, ‘இனப் படுகொலை’ மட்டுமல்ல… ‘ஈனத்தனமான படுகொலை’யும் கூட!

நன்றி: விகடன்