திங்கள், 11 மே, 2009

செய்து முடி; அல்லது, செத்து மடி!

பதினாறே வயது நிரம்பிய சிறுவன் பிரபாகரனுடன் இன்னும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து, "சிலோன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்" பேருந்துக்குத் தீ வைப்பது என "தமிழ் மாணவர் பேரவை"யில் முடிவு எடுக்கப்பட்டது. பேருந்தை நெருங்கியபோது, தூரத்தில் ஆட்கள் வருவதைப் பார்த்ததும் பயந்துபோய், உடன் வந்த மூவரும் திரும்பி ஓடினார்கள். ஆனால், எந்தவிதப் பதற்றமும், பயமும் இல்லாமல் திட்டமிட்டபடி தீ வைத்துத் திரும்பினான் சிறுவன் பிரபாகரன். பேரவை உறுப்பினர்கள் பிரபாகரனைத் தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.

"தம்பி! உனக்குப் பயமே வரவில்லையா?"என ஆர்வமுடன் கேட்டார்கள்.

"இந்தியச் சுதந்திர வீரர்கள் நேதாஜி, பகத்சிங், காந்தியின் போராட்டங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டதையே மந்திர மாகக் கடைப்பிடிக்கிறேன். அதனால், எனக்குப் பயமென்பது கிடையவே கிடையாது" என்று நெஞ்சை உயர்த்திச் சொன்னான் பிரபாகரன்.

"அப்படி என்ன மந்திரம்?"

"செய்து முடி; அல்லது, செத்து மடி!"

1954-ம் வருடம், நவம்பர் 26&ம் தேதி, இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறையில், வேலுப்பிள்ளை & பார்வதி தம்பதியின் நான்காவது மகனாகப் பிறந்தார் பிரபாகரன். சிங்களர் கள் தமிழர்களுக்கு இடையே பெரும் பூசல்கள் இருந்த காலம் அது. கோயில் பூசாரியாக இருந்த தமிழரை உயிருடன் தீ வைத்து சிங்களர்கள் கொளுத்தி யதையும், தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தார் டின்களில் உயிருடன் போட்ட கொடூரங்களையும் கேட்ட பிரபாகரனின் ரத்தம் கொதித்தது. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டுத் தீவிர எதிர்ப்பில் இறங்கினார். 18 வயதில் டி.என்.டி. எனப்படும் "தமிழ் புதிய புலிகள்" எனும் அமைப்பைத் தொடங்கினார். இதுவே பின்னர் "விடுதலைப் புலிகள்" இயக்கமாக மாறியது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் தரிசனம் முடித்து வந்த மேயர் ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்று, அவரது காரிலேயே தப்பியோடியதுதான் (1975) பிரபாகரனின் முதல் அதிரடி நட வடிக்கை. விடுதலைப்புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள அரசு 1983&ம் வருடம் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியதில், ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; வீடுகள் கொளுத்தப் பட்டன. அதுவரை சிறுசிறு தாக்குதல் களை மட்டுமே செய்து வந்த புலிகள் அமைப்பு, ராணு வத்தை எதிர்த்துப் போரிடத் தொடங்கியது.

"செய்து முடி; அல்லது, செத்து மடி!" என்பதே புலிகளின் போர்க் குரல் மந்திரமாக ஒலித்தது.

இந்திய அரசு சமாதானப் பேச்சில் ஈடுபட்ட 1986&ம் வருடம், சென்னையில் பிரபாகரன் தமிழக போலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்டதும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் நிருபர்கள் அவரிடம், "இந்தியாவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கும் நீங்கள், இலங்கையில் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களே, ஏன்?" என்று கேட்டார்கள்.

"அறப் போராட்டத்தால் சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்குத்தான் அந்தப் போராட்டத்தின் மதிப்பு தெரியும். நாங்கள் எந்த வகையான ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான், "செய்து முடி; அல்லது, செத்து மடி!" என்கிற கொள்கையுடன் ஈழத்தில் உயிர்ப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார் பிரபாகரன்.

பல்வேறு அரசியல் மாற்றங்களால், விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது. உணவுப் பொருள் முதற்கொண்டு எரிபொருள் வரை தடை செய்யப்பட்ட நிலையிலும், இன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் ஈழத்தில் கல்வி, வேளாண்மை, விஞ்ஞானம், ஏவுகணை, இன்டர்நெட் என எல்லாமே நவீனமாக இருக்கிறது. இந்த இயக்கத்தினரால் எதுவும் செய்து முடிக்க முடியும் என்று உலகமே நம்புவதற்குக் காரணம், "செய்து முடி; அல்லது, செத்து மடி!" என்கிற புலிகளின் மந்திரம்தான்.

இணையத்தில் படித்தது.

கருத்துகள் இல்லை: