வியாழன், 16 ஏப்ரல், 2009
தமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை
சிறீலங்கா இராணுவம் அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும்,
இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம்.
பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும்.
இது பலவகைப்படும் அதாவது அதன் தன்மை மற்றும் நிறங்களுக்கு ஏற்ப வெண்பொஸ்பரஸ், செம்பொஸ்பரஸ், கருபொஸ்பரஸ், நிறமற்ற பொஸ்பரஸ், மஞ்சள் பொஸ்பரஸ் என்று வகைப்படும். இதில் தாக்குதிறன் அதிகமானது சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் செம்பொஸ்பரஸை சொல்லலாம். அதைக்காட்டிலும் பன்மடங்கு சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் வெண்பொஸ்பரஸ்தான்.
இந்த செம்பொஸ்பரஸானது நீரில் அமிழ்த்திவைத்தே பாதுகாக்கப்படுவதோடு அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு வளிபடும்படி வைக்கப்படும் பட்சத்தில் அது மிக விரைவாக தீப்பற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இதனை ஆய்வுசாலைகளில் இருந்து அதாவது பாடசாலை ஆய்வுகூடங்களில் இருந்து களவாக சட்டைப்பைகளில் எடுத்துச்செல்ல எத்தனித்த பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் மாணவர்கள் இதனால் எரிக்கப்பட்ட சம்பவங்கள் கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கடுத்ததாக வெண் பொஸ்பரஸினைப் பார்ப்போமானால் அது மிகவும் அதிக எரிபற்றக்கூடிய தன்மை காணப்படுகின்றது. அதாவது அது மிகை ஒக்சிசன் படக்கூடிய இடத்தில் வைக்கப்படுமாயின் அது வெடித்துக்கூட சிதறும் சந்தர்ப்பம் உள்ளதோடு நீண்டநேரம் எரியக்கூடிய தன்மையும் காணப்படுகின்றது.
ஒவ்வொரு சிறுதுளி வெண்பொஸ்பரசும் தன்னைச்சூழ ஒக்ஸிசன் இருக்கும்வரை தான் அழியும்வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்தவகை பொஸ்பரசை பாவித்துத்தான் அமெரிக்கா போன்ற சில நாடுகள் எரிகுண்டுகளை பாவித்து வந்தன. பாவித்து வருகின்றன அதாவது இவ்வகைக் குண்டுகளில் நீரில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் குண்டுகள் வீசப்படும்போது நீர் வெளியேற்றப்படுவதனால் அவை வளியிலுள்ள ஒக்ஸிசனை பாவித்து எரிய ஆரம்பிக்கும். இவை எரிவதன் மூலம் பெருமளவான வெப்பம் ஏற்படுவதோடு அவை வீசப்படும் இடத்தில் இருக்கும் அனைத்துப்பொருட்களையும் பற்றவைக்கும் தன்மை உடையன.
அமெரிக்கா வியட்னாம் போரின்போது இவ்வகைக் குண்டுகளை பாவித்தது இணையங்கள் மூலமும் செய்திகள் மூலமும் அறியமுடிகின்றது. இவ்வகை குண்டுகள் வீசப்படும்போது ஒரு சிறு நீர்த்துளியளவு பொஸ்பரஸ் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஒருவரைக் கொல்லக்கூடிய தன்மையக் கொண்டிருப்பதாகவும், ஒரு குண்டு வீசப்பட்ட இடத்தில் அது நிலத்தில் வீழ்ந்து வெடிக்குமாயின் ஒரு குறிப்பிட்ட பாரிய பரப்பளவுள்ள ஓர் இடத்தில் இருக்கக் கூடிய மக்கள், விலங்குகள், அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் தன்மை உடையனவாகவும், இவை வீசப்பட்ட இடத்தில் இருக்கும் அனைத்தும் கருகிக் காணப்படக்கூடும்.
மனிதனின் தோலில் படுமிடத்தில் வெண்குஸ்டம் அல்லது வெண்தோல் நேய் ஏற்படுவதுபோல தோலுடன் சேர்ந்து எரிந்து மேலே இருக்கும் தோலை அது எரிப்பதன் மூலம் அவ்விடம் ஓர் முற்றான தாக்கத்திற்கு உள்ளாகி தோல் நீக்கப்பட்டு தசைப்பகுதி வெளித்தெரியும்படி ஆகின்றது. இலங்கைக்கு யார் இவ்வகையான ஆயுதங்களை வழங்கக் கூடியவர்கள் என்று பார்க்கும் பட்சத்தில் முதல் நிலையில் இருக்கும் நட்புநாடான அமெரிக்காவோ அல்லது ஸ்ரேலோதான் வழங்கிஉதவி இருக்கவேண்டும், இதற்கு காரணமாக பார்த்தால் கொழும்பில் வைத்து றொபேட்டோ பிளேக் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கிய செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும், அச்சந்தர்ப்பத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டது.
அதில் இவ்வகை வெண்பொஸ்பரஸ் குண்டுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதுவே உண்மை. திரை மறைவில் வழங்கப்பட்டு தமது தார்மீக ஆதரவை நல்கிவரும் அமெரிக்காதான் இதனை வழங்கியிருக்கின்றது. இதன் அரசியற் பின்னணி பார்த்தால் தமக்கு ஓர் பலமான நட்பு நாடு ஒன்று தென்னாசியப் பிராந்தியத்தில் சீனா, இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கப்படவேண்டிய ஓர் சூழ்நிலை தேவைப்படும் பட்சத்தில் தமது கைப்பிள்ளையாக பாவிப்பதற்கு சிறீலங்காவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி செய்துவருவதுதான் உண்மை.
இவ்வகையான் குண்டுகள் இரசாயன ஆயுதங்களாக வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதோடு இவை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீச முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவை சுருங்கக் கூறின் ஒரு பொஸ்பரஸ் துளியானது கையில் விழும் பட்சத்தில் கையை எரித்து துளையாக்கி துவாரமிடுவதுடன் எழும்பைக்கூட எரித்து தசைப்பகுதிக்குள் ஊடுருவிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கூட அவை வெடித்து சிறு துகள்களாக சிதறி பாரிய சேதத்தினை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.
நம் உறவுகள் இக்குண்டுகள் வீசி எரிக்கப்படுமுன்னர் நாம் மிக விரைவாக பகைமையை மறந்து வேறுபாடுகளைக்களைந்து ஓரணியிற் திரண்டு இன அழிப்புப் போருக்கு ஓர் முடிவுகட்டி நம் உறவுகளை காப்போமாக என்று உறுதி எடுப்போமாக. இனியும் தாமதிக்கவேண்டாம், இந்த ஒரு குண்டே போதும் 100பேரை ஒரேநேரத்தில் எரித்து சாம்பலாக்க. இணைவோம், ஓரணியில் இணைவோம். ஒருமித்து குரல் கொடுப்போம்.
கீழே உள்ள ஒளிப்படங்கள் வியட்னாம் போரின்போது எடுக்கப்பட்டவை (தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது)
தமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை இதோ அதற்கான சாட்சியங்கள்
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
http://www.tamilskynews.com/index.php?o … ;Itemid=54
http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக